பக்கம்:நம் நேரு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

87


 பிரிட்டிஷார் தங்கள் நலன்களைப் பாதிக்காத வகையில் அரசியல் பேரம் செய்து வந்தனர். புதிய சமஷ்டி, மாகாண சுயாட்சி என்றெல்லாம் திட்டங்கள் வகுத்துக் காட்டினர். காங்கிரஸ் அவற்றை முழுவதும் அங்கீகரிக்கா விட்டாலும், மாகாண சுயாட்சி அடிப்படையில் தேர்தலில் கலந்து கொள்ளத் துணிந்தது.

நாடு பூராவும் தேர்தல் ஜூரம் பரவியது. உற்சாகமும் பரபரப்பும், பொங்கி எழுந்தன. நேரு தேர்தலுக்கு wiற்கவில்லே. ஆயினும் சூறாவளிச் சுற்று பிரயாணம் செய்து காங்கிரசுக்கு செல்வாக்குத் தேடினார். தேர்தல் பிரச்சார சரிதையிலேயே அவ்வருஷம் நேரு பெரியதொரு ‘ரிகார்டு ஸ்தாபித்து விட்டார் என்றே சொல்லவேண்டும்.

நான்கு மாத காலத்தில் நேரு சுமார் ஐம்பதினாயிரம் மைல் பிரயாணம் செய்தார். சுற்றுப் பிரயாணத்திற்காக அவர் உபயோகிக்காத வாகனம் எதுவுமில்ல. ஏரோப்ளேன், ரயில் வண்டி, மோட்டார், லாரி, பலரகமான குதிரை வண்டிகள், மாட்டு வண்டி, பைஸைக்கிள், யானை, ஒட்டகை, குதிரை, ஸ்டீமர், தோணி, சிறுபடகு எல்லாம் அவருக்கு உதவின. சரியான போக்குவரத்து வசதியற்ற தூரதூர ஊர்களுக்கெல்லாம் அவர் போக தேர்ந்தது. அப்போது அவர் நடந்து திரிய அஞ்சவில்லை.

தினம் தினம் டஜன் கணக்கான பொதுக்கூட்டங்களில் பேசினார். ஆயிரமாயிரம் ஜனங்களுக்குக் காங்கிரஸின் லட்சியங்களை எடுத்துச் சொன்னார். இப்படி இம-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/90&oldid=1369345" இலிருந்து மீள்விக்கப்பட்டது