பக்கம்:நம் நேரு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

நம் நேரு


யம் முதல் குமரி வரை ஓய்வு ஒழிவு இன்றிப் பிரசாரம் செய்தார் நேரு. காங்கிரஸ் வெற்றி பெற்றது: மாகாண மந்திரி சபைகளை அமைத்து ஆளத் தொடங்கியது. நேருவின் சகோதரி ஐக்கிய மாகாண மந்திரிகளில் ஒருவராகி ‘இந்தியாவின் முதல் பெண் மந்திரி' எனும் அந்தஸ்தைப் பெற்றார்.

நேரு மூன்றாவது முறையாகக் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ச்சியாக இரண்டு வருஷங்கள் தலைமைப் பொறுப்பை நிர்வகித்த நேரு அலுப்படைந்தார். மறு வருஷமும் அவரே தலைவர் என்ற பேச்சு அடிபட்டது. நேரு மீண்டும் தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்பவில்லை. தலைமையில் மாறுதல் தேவை என உறுதியாக நம்பினர் அவர். ஆகவே ஒரு ’வேலேத்தனம்' செய்தார்! அதை அவரே மிகுதியும் ரசித்துக் கொண்டார்.

ஜவஹர்லால் நேருவை மீண்டும் தலைமைக்குத் தேர்ந்து எடுக்கக் கூடாது; அவரே தொடர்ந்து மூன்று வருஷங்கள் காங்கிரஸின் தலைவராக இருப்பதால் பாதகங்களே ஏற்படும் என்று காரண காரியங்கள் காட்டிக் காரசாரமாக ஒரு கட்டுரை எழுதித் தன் பெயரை வெளியிடாமலே, கல்கத்தா ‘மாடர்ன் ரெவ்யூ’ பத்திரிகையில் பிரசுரமாகும்படி செய்து விட்டார். அந்தக் கட்டுரை யாரால் எழுதப்பட்டது என்கிற விஷயம் எவருக்குமே தெரியாது. பத்திரிகை ஆசிரியருக்குக் கூடத் தெரியாதாம். அக்கட்டுரை அரசியல் வட்டாரங்களில் எழுப்பிய எதிரொலிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/91&oldid=1369353" இலிருந்து மீள்விக்கப்பட்டது