பக்கம்:நம் நேரு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

நம் நேரு


சுதந்திர சரித்திரத்தில் பெரிய பெரிய அத்தியாயங்களாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆகும் பாக்கியம் ஜவஹர்லால் நேருவுக்கு கிடைத்தது. சுதந்திர சர்க்காரைத் திறம்பட வகிப்பதுடன், நாட்டின் முன்நின்ற எத்தனையோ பிரச்னைகளுக்கு முடிவு காண வேண்டிய பொறுப்பும் நேருவுக்கு ஏற்பட்டது.

இரண்டாவது மகாயுத்தத்தின் விளைவுகளால் உலக நாடுகள் எல்லாமே பாதிக்கப்பெற்று விட்டன. யுத்தம் முடிந்திருந்தாலும், யுத்தபீதி மடிய வில்லை. எந்தச் சமயத்திலும் மற்றொரு உலக யுத்தம் கோரமாய் தலைதுாக்கலாம் என்ற பயங்கரம் நீத்தது. வல்லரசுகள் ஒன்றைக் கண்டு ஒன்று அஞ்சி, பயத்தினால் மற்றொரு யுத்தத்துக்கு விதை தூவு வதிலேயே ஆர்வம் காட்டலாயின.

உலக நாடுகள் எதையும் பகைத்துக் கொள்ளாமல், நிலையான சமாதானத்தை வலியுறுத்தும் முறையில், இந்தியாவில் அயல் நாட்டுக் கொள்கைகளை அமைத்தார் நேரு. ஆசியப் பிரச்னைகளில் அக்கறை காட்டினார்.

ஆசிய நாடுகள் நேருவின் தலைமையை எதிர் நோக்கின. உலக வல்லரசுகள் அவரது மேதைக்கும் திறமைக்கும் தலைவணங்கி, அவருடைய ஆலோசனைகளை அங்கீகரித்தன. உலகின் முன்னிலே நேருவின் மதிப்பு இமய அளவு உயர்ந்து விட்டது. ‘மனித குல மாணிக்கம்’, சமா தான தூதுவர் என்றெல்லால் போற்றப்படுகிறார், நேரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/93&oldid=1368297" இலிருந்து மீள்விக்கப்பட்டது