பக்கம்:நம் நேரு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

91



சுதந்தர இந்தியாவில் பொதுத் தேர்தல் வந்தது. அரசியல் கட்சிகள் பலவும் காங்கிரஸைத் தோற்கடித்து நேரு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றும் பலனில்லை. நாட்டினரின் நம்பிக்கை நேருவிடமே நிலைத்துவிட்டது. ‘எங்களுக்கு நேருஜீ தான் வேண்டும்; வேறு ஜீ எவரும் வேண்டாம்' என்று தீர்ப்பளித்து விட்டார்கள். ஆகவே நேருவே மறுபடியும் இந்தியாவில் பிரதமர் ஆனார்.

இந்தியாவில் பொருளாதார நிலையை வளப்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், பலதுறைகளிலும் வழிகாட்டும் ‘ஐந்தாண்டுத் திட்டம்', தீட்டப் பட்டது. சர்க்காரின் ஆட்சி முறையில் இந்தியாவில் நிகழ்த்துள்ள சாதனைகள் பெரியன. இனி வரப்போகும் வருஷங்களில் பலனளிக்கக்கூடிய முறையில் வகுக்கப் பெற்றுச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிறந்தன. உலகின் பல பகுதிகளிலும் உள்ள நாட்டினர் யாவரும் வியந்து பாராட்டும் வகையில் உள்னன அவை.

உலகின் வல்லரசுகள் புதிய குடியரசுக் குழந்தையான இந்தியாவையும் தங்களுக்குச் சமமான அந்தஸ்தில் மதித்திருப்பதற்கு நேருதான் முக்கிய காரணம் என்று சொன்னல் அது மிகையான கூற்று அல்ல.

காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான் உறவு, கொரியாப் பிரச்னை, யுத்தக் கைதிகள் பிரச்னை, இலங்கை இந்தியர் பிரச்னை முதலியவைகளில் திருப்திகரமான முடிவு காண ஆர்வத்துடன் பாடுபட்டது நேருவின் திறமைக்கும் சமாதான ஆர்வத்திற்கும் நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/94&oldid=1369186" இலிருந்து மீள்விக்கப்பட்டது