பக்கம்:நம் நேரு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

நம் நேரு


யில் நாம் தலையிட விரும்பவில்லே. நமது உரிமைகளில் பிறர் குறுக்கிடுவதை நாம் ஆதரிக்கவும் முடியாது. உலக நாடுகளுக்கிடையே பலவித அபிப்பிராய பேதங்கள் இருங்தாலும் கூட பரஸ்பரம் சிநேகபாவமும் கூட்டுறவும் அவசியம் என நாம் நம்புகிறோம். நமது கொள்கைகளினாலோ, அல்லது நாம் கையாளத் துணிகிற சில நடை முறைகளினாலோ, உலகத்தில் நீடிக்கிற பெரும். பிரச்னைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை விளைவித்துவிட முடியும் என்ற வீண் ஆசை நமக்குக் கிடையாது. ஆனால் சில வேளைகளிலாவது சாதகமான விளைவுகள் ஏற்படச் செய்து சமாதானம் நீடிக்க உதவிபுரிய முடியும், அதற்குச் சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது சகலவிதமான முயற்சிகளையும் செய்வதே கல்லது.”

நம் நாடு பலமும் வளமும் அடைவதற்கு இதர தேசங்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லே; நமது நிலையை நாமே உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி நேரு வற்புறுத்தி வருகிறார். கல்யாணிக் காங்கிரளின்போதும் இதை எடுத்துச் சொன்னார் அவர்:

“தமது முயற்சிகளினால்தான் நமது வலிமையை நாம் பெருக்கிக் கொள்ள முடியுமே தவிர மற்றவர்களை நம்பியிருப்பதினால் அல்ல. தற்காப்பு, சுய தேவைப் பூர்த்தி ஆகியவைகளினால் நமது பலம் பெருகுவதுடன் இதர நாடுகள் நம்மிடம் கொள்ளும் மதிப்பும் அதிகரிக்கும். நமது நாடு நம்முடையதே என்ற நிலையும் நீடிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/97&oldid=1368281" இலிருந்து மீள்விக்கப்பட்டது