பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

செங்கதிர், வானம், வெண்கதிர், விண்மீன்கள் யாவும் தங்கள் தங்கள் ஒத்தியைபில் இடம் பிறழாமல் செயலாற்றி வருகின்றன. தெய்வ முறைமைகளை வல்லந்தமாக மீறுவதில்லை, இயற்கை ஆற்றல்களிடமிருந்து இந்த உண்மையை மனிதன் கற்றுக் கொள்ளட்டும். அமைதியோடும் இணக்கத்துடனும் வாழத் தெரிந்து கொள்ளட்டும். - எவ்வளவுதான் ஆற்றல் மிக்கவனாகவும் அறிவாளியாகவும் இருந்தாலும் இயற்கையின் நெறிமுறைகளின் கட்டுப்பாட்டுக்கு அடங்கியே வாழவேண்டும்.

(இருக் 10)

நிறையாற்றல் வாய்ந்த இறையே, - ஒழுக்க நெறியிலேயே எங்கள் மனம் செல்ல அருள்வாய். (இருக் 10)

புடவியின் மெய்ப்பொருளே,

எங்கள் சொல்திறனிலே வன்மை, ஆழம், பிழையின்மை

யாவும் மிளிரச் செய்தருள்க. (இருக் 10)

தண்ணொளிமிக்க மின்னொளித் தலைவ, ஆன்மிக அறிவினாலும் கடுமையான கட்டுப்பாட்டினாலும் தங்களைச் செம்மையாக்கிக் கொண்ட முனிவர்கள் செல்லும் நெறியில்

எங்களையும் ஈடுபடுத்துவாயாக. உன் திருவடி பணிகிறேன், இறையே. நீ வழங்கும் ஒளி என்னை அழிவில்லாத பேரின்ப நிலைக்கு நடத்திச் செல்லட்டும். (அதர் 19)

த.கோ - தி.யூரீ