பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும். அப்படி அலர்ந்தவையே இருக்கும் சாமமும், மற்றவை உள்ளிசை பயின்ற நூற்பாக்கள். மேலும் நான்கு வேதமும் வாய்மொழிச் செல்வங்கள். எனவே அவை இசையில் இணைந்தாலன்றி செவிச்செல்வமாகத் தொடர்ந்து வாழாது. ஓசையும் ஒலியும் ஒவ்வொரு மொழிக்கும் இரு மூச்சுப் பைகளைப்போல.

தமிழ்த் தென்றல் திரு. வி.க. கூறுவதுபோல "இயற்கையின் கூறுகள் பல திறந்தன. அவற்றில் எல்லாம் கவிதைகள் இருக்கின்றன. உலக இயற்கை ஒரு கவிதைக் கோயில்.

"இயற்கை இருவகை. ஒன்று பொதுமைப்பட்டது; மற்றொன்று சிறப்பின்பாற்பட்டது. முன்னது அறிவியல், பின்னது கவிதை, அதாவது பாட்டு. அது மொழி பெயர்ப்புக்கு அடங்குவதில்லை. அம்மம்மொழிக்கே உரியது. இன்பமும் .சுவையும் நுகர்தல் கூட காரணம் ஒலியின்பம், அடுத்துக்

கருத்தின்பம்" -

நற்றமிழில் நால்வேதம் கருத்தின்பத்தினை மட்டும் கருத்தோடு தரும் முயற்சியாகும். இந் நால் வேதப் பாடல்களைப் பாடல்களாகத் தரமுடியும், அது என்னால் முடியக் கூடிய ஒன்று. அத் தகுதியும் திறமையும் எனக்குண்டு. காரணம் நான் பாவலன். பாரதி - பாரதிதாசன் தோள் மீது நிற்பவன். என் திறமையும் தகுதியும் பாட்டினைப் பாட்டாகச் செய்கையில் என் பங்களிப்புச் சேரும், எல்லை குறுகிய தாகிவிடும். அப்படிச் செய்து விட்டனர், புதுக் கவிதை நுனிக் கொம்பேறிகள். எனவே இனிய எளிய அரிய உரை நடையில்