பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

தலைவர்க்கெல்லாம் தலைவனே, காலங் காலமாக முன்னோர்களிடமிருந்து தொடர்ந்து வரும் கட்டுகளிலிருந்து . எங்களுக்கு விடுதலை அளிப்பாய். கந்திலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றைபோல் நாங்களும் உன்னருளால் விலங்குணர்ச்சிகளிலிருந்து விடுபடுவோமாக.

(இருக் 7)

எல்லாமறிந்த இறைவன் கைக்கெட்டும் தொலைவிலேயே இருக்கிறான். வாய்ப்பினை நழுவவிடாதே. கண்டு களிப்புறக் கிட்டவே இருக்கிறான். இயற்கையின் அழகைக் கண்குளிரக் கண்டு களித்திடுவாய். இயற்கையின் எழிலும், இறைவனைப் பற்றிய தெய்வீகக் கவிதைகளும் அழிவும் இறப்பும் அற்றவை. (அதர் 10)

குணக்குன்றே, மேலிருந்தும் கீழிருந்தும் எங்களைச் சிறைபடுத்த வீசப்படும் வலைகளிலிருந்து எங்களைத் தப்பிக்கச் செய்வாய். கெட்ட கனவுகள், துயரங்கள் இவற்றிலிருந்து எங்களைக் காத்திடுவாய் நற்பண்புகள் நிறைந்திருக்கும் உலகிற்கு எங்களைச் செல்ல விடுவாய். (அதர் 7)

நாங்கள் எவற்றுக்கெல்லாம் அஞ்சுகிறோமோ, அவற்றிலிருந்தெல்லாம் எங்களைக் காத்தருள்வாய். எங்கள் பகைவர்களை விரட்டி அடித்திடுவாய். உனது நிழலில் நாங்கள் பாதுகாப்பைத் தேடுகிறோம்.

த.கோ - தி.யூரீ