பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O1

எங்களைக் காப்பாயாக. நலமிக்க யாவையும் எங்களுக்கு நல்குக. (இருக் 1) *

- J.

உலகைக் காப்பவனே, கதிரவனைக் காணவிடாமல் செய்து விடாதே. எங்களுடைய வீரப்புதல்வர்கள் எதிரிகளை அடக்கி வெற்றி வாகை சூடட்டும் எங்களுடைய கால்முைைனகள் பெருகித் தொடர்ந்து வளரட்டும். (இருக் 2)

மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு எத்திசையிலும் எங்கள் படைப்பின் பகவன் இருந்தாலும் சரி, ஏற்றவை யாவற்றையும் எங்களுக்களித்தருள்வாய். நீண்ட வாணாளை எங்களுக்கு வழங்கிடுவாய்.

(இருக் 10)

பரந்த பேருலகின் தலைவ, ஞாயிறு, நிலவு, விண்மீன் தீக்கோளங்கள், வெவ்வேறு தோற்றமும் அமைப்பும் கொண்ட கூட்டம் இவற்றின் ஆற்றலை ஈர்த்து நிறுத்தி வைத்துப் கொள்ளும் ஆற்றலை எனக்களிப்பாய். (அதர் 1)

விண்கோள்களைப் போன்று தூய்மை பெற்று நாங்கள் ஒளி மிக்கவர்களாகத் திகழ வரம் அருள்வாய். தடைகள் யாவற்றையும் கடந்து, எங்களுடைய வீரமிக்க தோழர்களோடு கூட நூறாண்டு புகழ்மிக்க சிறப்பான வாழ்வு வாழ்ந்திட வரமருள்வாய். (அதர் 12) 聲

1.

{

த.கோ - தி.யூரீ