பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;

o

106

எங்கும் நிறைந்திருக்கும் தெய்வமே மனத்தாலோ, வாக்காலோ, செயலாலோ உன்னை இகழ்ந்திருக்கலாம். புறக்கணித்திருக்கலாம். நாங்கள் செய்தது மாபெரும் தவறு தான். உங்கள் மன்னிப்பைக் கோருகிறோம். எங்கள் பிழையை மன்னித்து ஆட்கொண்டிடுவாய். கடவுளை வெறுக்கிறவன் தவறான பாதைகளுக்கு எங்களைக் கவர்ந்திழுக்க அணியமாகக் காத்திருக்கிறான். (இருக் 4)

பேருலகின் வீறிய, எங்களைக் கைவிட்டு விடாதே. வெறுப்புற்ற நிலையில் நீ இருக்கும் பொழுது, உன்னிடம் நாங்கள் உறவாடுவது காரணமாக எங்களைச், சித்திரவதைக்கு ஆளாக்கி விடாதிருப்பாயாக. உன்னை மனதாரத் தொழுவதில் எங்கள் பங்கு இருக்கட்டும். இயற்கை வளங்களை அளித்து எங்களை வாழ்த்திடு.

(இருக் 7)

தலைவ, உன் புகழை என்றும் பாடுபவனாகிய நான் அப்படி என்ன எல்லை மீறி விட்டேன்? எவரும் வென்றிட முடியாதவ, உள்ளதைச் சொல்லிடுவாய், - . தீவினை எதுவும் செய்திடவில்லை என்ற உணர்வுடன் அப்பொழுது தான் பற்றுடன் உன்னை நெருங்கமுடியும். பண்புடைய தலைவ, நாங்கள் தீவினையே செய்கின்றோமென்றால், அது மனமொப்பிச் செய்யப்படுவதில்லை. நாங்கள் வளர்ந்த சூழ்நிலையே அதற்குக் காரணம்

நற்றமிழில் நால் வேதம்