பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

காட்டிக் கொள்கிறான். அவளிடமிருந்தே பேருலகெல்லாம் தன் செயல்பாட்டுக்கு ஆக்கமும் ஊக்கமும் பெறுகின்றன. (இருக் 1)

வாய்மொழிகள் நான்கு வகைப்படும். படிப்பாளிகளும், அறிஞர்களும் அவற்றை நன்கறிவர். இவற்றில் மூன்று கமுக்கமாகக் காக்கப்படுகின்றன. பொது மனிதனால் புரிந்து கொள்ள முடியாதவை.இவை. ஒலி மூலம் எண்ணங்களை வெளியிடச் செல்லும் நான்காவது வகையையே மக்கள் பேசுகிறார்கள்.

(இருக் 1)

திருமொழியின் அன்னையே, எண்ணங்களின் பெட்டகம் உன் நெஞ்சு. நிறைந்த செல்வம், நல்லவை யாவற்றையும் உள்ளடக்கியது. - இன்பத்தின் மூல ஊற்று உன் நெஞ்சம், உள்ளம் திறந்து அதிலிருந்து வாரி வழங்குவாய், நிறைந்த வாழ்வை எங்களுக்கு அருள்வாய். (இருக் 1)

நமது உணர்வாற்றல், தெய்வீக மெய்யறிவு, தெய்வீகப் பண்பாடு ஆகியவற்றைத் தெய்வவாக்கு முழுமையாக்குகிறது. நாங்கள் செய்யும் குற்றம் குறையற்ற வேள்வி வழிபாடு இவற்றில் எங்கள் கூடவே இருப்பாய். : எங்கள் நலனைக் காப்பாய். (இருக் 3) #

- த.கோ - தி.பூரீ - - لاجلا