பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O

அறியாமை இருளால் மூடப்பட்டிருக்கும் உண்மையின் ஒளியை, எல்லாமறிந்த முனிவர்கள் கண்டு கொண்டனர். தெள்ளத் தெளிவாக இந்த உண்மையை

மறைகள் கூறுகின்றன. (இருக் 4)

தெய்வீக வாக்கைக் கடவுள் உண்டாக்கினார், உயிர்வாழிகளும் அதை உச்சரிக்கின்றன. உணவு, வலிமை, புகழ், மகிழ்ச்சி, ஆகியவற்றை அளிப்பவை எனது உலகத்தினரால் பாராட்டப்படுவது. நமது விருப்பத்தை நிறைவு செய்யும் பசுவைப் போல இந்த வாய்மொழி நம்மை வந்து அடையட்டும்.

(இருக் 8)

பெருந்தன்மை மிக்கதும் ஊக்கமளிப்பதுமான இந்தத்

தெய்வத் திருமொழி எல்லோருக்கும் கிட்டட்டும்.

அவர்களுடைய மெய்யறிவை விரித்துப் பெருக்கட்டும்.

(இருக் 10)

மொழித் தலைவி, - மனிதர்கள் அந்த முதற் சொல்லைக் கூறும் பொழுது மிக்கச் சிறப்புள்ளதும் தூய்மையாகவும் உள்ள ஒன்றை ஒளிக்கு முன் கொண்டு வருகிறார்கள். தாங்கள் நெஞ்சத்தில் ஆழமாக இடம்பெற்றிருந்த கமுக்கத்தை அன்பு வழியே கண்டு பிடிக்கிறார்கள்.

(இருக் 10)

முறத்தின் மூலம் நெல்லைப் புடைக்கும் பொழுது, மாசு நீக்கப்பட்ட தூய தானியம் கிடைப்பதுபோல, அறிவின் துணைகொண்டு அலசும் பொழுது மொழியின்

t

நற்றமிழில் நால் வேதம்