பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

இந்த அறிவொளி, கேளாச் செவிகளைப் கூடச் சென்றடைந்து தன் சிறப்பை எடுத்துரைக்கிறது.

(இருக் 4)

இயற்கையின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு எண்ணுகின்றவன், அவற்றின் படி நடக்கிறவன், அவற்றின் படி வாழ்கிற மாந்தனுக்கு மெய்யறிவு தானாகவே வந்து சேர்கிறது. (இருக் 10)

பொய் பேசுகிறவனைக் கடவுள் மன்னிப்பதில்லை.

(இருக் 10)

உண்மை, தவறற்ற அறங்கள், ஒழுக்கம், தூய்மை,

வழிபாடு, தியாகம் இவையே நிலத்தில் நிலை நிற்கின்றன. முக்காலமும் எங்களைத் தாங்கி வரும் நாளிலத்தாயே, வளமையை எங்களுக்கு வாரி வழங்குவாய். (அதர் 12)

ஒளிமிக்க தலைவ, துறவிகளுக்கான ஒழுக்கத்தின் அடிச் சுவட்டிலே பற்றார்வம், அறிவாற்றல், ஊக்கம் இவை கொண்டு முன்னேற வழி காட்டுவாயாக. ஆசான்கள், எங்களை நேசித்திட வாழ்த்திடுவாய், நுண்ணறிவின் வலிமையோடு நிறைவாழ்வு வாழ்த்திட வரமளிப்பாய். (அதர் 7)

அண்ட ஒழுங்குமுறையின் சீரான செய்கைகள்தாம் நிலத் தாயைச் சம நிலையில் நிறுத்துகின்றன.

(அதர் 4)

த.கோ - தி.பூரீ

$