பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

செங்கதிர் கற்றைகளுக்கு உயர்ந்து நமது நலனுக்காக மழை பொழிவிக்கிறது. (யசுர் 2)

நீ வேள்வி செய்யும்போது தூய தீயில் * நெய்யும் மற்ற உணவுப் பொருள்களையும் சேர்க்கிறாய். ஒன்றாகக் கலந்து அவை தூயகதிர்கள், தண்ணி, காற்று, இவற்றுடன் இணைந்து

வான்வெளி முழுவதும் பரவிச், சூழலுக்கு வல்லமை அளித்து மக்களுக்கு வளம்பெருகும் மழையும் இதமளிக்கும் ஒளியும், வெளிச்சமும் உயிரும் ஊற்றமும் உள்ளுரமும் அளிக்கின்றன. (யசுர் 2)

ஒப்புயர்வற்ற பெருமை வாய்ந்த பெரும, நீ எல்லையில்லாப் பரப்பகற்சியில் நிறைந்திருக்கிறாய். விருந்து வல்லமை வாய்ந்தவ, நூற்றுக்கணக்கான நிலங்களும், செங்கதிர்களும், கண்ணுக்குத் தெரியும் கோள்களும் பார்வைக்கு எட்டாத கோள்களும் உன் ஆணைக்காகக் காத்திருக்கின்றன. ஆனால், நீயோ இவை யாவற்றையும் கடந்தவன். தோன்றியுள்ள உலகமும், படைக்கப்படாத உலகமும் பிறந்தும், பிறக்காமலிருப்பவையுமாகிய உயிர்களும் காலத்தால் கட்டுப்படாத உனது படைப்புலகின் ஒரு சிறு கூறே; உலகின் கோள்கள் யாவும் יא உன்னையே சுற்றி வருகின்றன. (இருக் 8) 1£

த.கோ - தி.பூரீ