பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

ப்ேரின்பமளிக்கிற தலைவ, தெய்வீக மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லுகிற ஆன்மிக களிப்பூற்றைத் தூய்மைப்படுத்தி உயர்த்துகிற உனது அமுதத்தை நெஞ்சுமுழுவதும் நிறைத்திடுவாய். (இருக் 9) բԴ* -

தீய எண்ணங்கள் யாவற்றையும் இந்த அமுதம் ஒழித்து விடுகிறது. 'ட்னது உயர்ந்த அன்பு எங்கள் உள்மனத்திற்குப் புதியதொரு ஆற்றலை அளிக்கிறது. (இருக் 9)

k - மெய்யறிவின் மூல ஊற்றே இந்தத் தேவாமுதம்தான். முரந்தச் செல்வம் தேவையோ,

அதையே நமக்களிக்கிறது. (இருக் 9)

கீழ்வானம் கோல வண்ணக் காட்சிக்குப் பொன் அழகு சேர்ப்பது அந்த தெய்வீக அமுதமே. மனித ஆன்மாவைத் தூய்மைப் படுத்தும் தெய்வீக

அமுதமாகிற சோம மதுவிற்கு இந்த வண்ணக்காட்சி வணக்கம் செய்கிறது. (இருக் 9)

தெய்வீக அன்பின் அமுதமாகிற சோம மது நம் யாவருடையவும் நெஞ்சிலுள்ள மாசு மறுக்களைக் களைந்து தூய்மையாக்குகிறது. இந் நிலையில் உள்ளுயிரானது அச்சம், துயர், அறியாமை, ஆகியவற்றினின்றும் விடுதலை பெறுகிறது. இவ்வாறு விடுபட்டுப் தெய்வ நம்பிக்கையோடும் ஆன்மிக மகிழ்ச்சியுடனும் வீரம் மிகுந்த உள்ளுயிர் இறைவனை அவனது முழ அழகுடனும் காண்கிறது.

(இருக் 9)

த.கோ - தி.பூரீ