பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

தியானம், பரந்த பார்வை, மெய்யறிவு, நுண்ணறிவு

எவனொருவன் உருவம், வண்ணம், சொற்கள் ஆகிய தொடர்புற்றவற்றை ஒருங்கினைக்கும் முதன்முதல் நூல் இழையை மட்டும் அறிந்திருக்கிறானோ, அவன் உலகின் அமைப்பை மட்டுமே தெரிந்தவனாகிறான். அவன் தெரிந்து வைத்துள்ளது மிகக் குறைவே. ஆனால், எவனொருவன் ஆழ்ந்து, புகுந்து உயிராற்றல்கள் ஒற்றுமையாகிற நூல்கள் இரண்டையும் மெல்லிய இழையுடன் சேர்க்கிறானோ அவன் உண்மை முழவதும் உணர்ந்தவனாகிறான். நெஞ்சத்தின் உள்ளேயும் உலகின் எல்லாப் பரந்த பகுதிகளிலும் நிறைந்திருக்கும் அனைத்து ஆற்றல் படைத்தவனும் எங்கும் நிறைந்திருப்பவனுமான இறைவனை, எவன் வணங்குகிறானோ அவன் இறைவனை நன்கு உணர்ந்தவனாகிறான்.

த.கோ - தி.யூரீ