பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

பெரு மகிழ்ச்சியான வாழ்வு பெற உனது நுண்ணறிவைத் தீட்டிக் கொள். - உன் உள்ளத்தை ஒளிமயமான காட்சி மூலம் வளப்படுத்திக் கொள்.

(சாம 101)

தற்காப்புக்காகவும் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும் உனது மெய்யறிவையும், எதிர்நோக்குத் திறனையும் வளர்த்துக்கொள். (சாம 161)

மெய்மை, பொய்மை இரண்டையும் பிரித்தறியும் தன்மை மூலம் உனது மெய்யறிவை வளப்படுத்திக் கொள். (சாம 171)

வேதங்களின் மெய்யறிவு வழி நடந்து நல்ல செயல்களைச் செய்; நெறியுடன் நல் வாழ்வு வாழ். (σπιρ 176)

மெய்யறிவு வளமுறப் பெற்றுக் கடமையுணர்வுடன் மேன்மையான வழியில் நடந்துகொள். சிறப்பான செயல்பாடுகளைப் புரி. (சாம 189)

காலை, நடுப்பகல், மாலை, இரவு, எந்தநேரமும் உனது தெய்வீக அருள் காட்சியை எனக்களித்திடுவாய். உதய ஞாயிற்றின் ஒளியில் மூழ்கி செடிகொடிகள் செழித்து வளர்வது போல் உனது அன்பு காரணமாக எங்களது அறிவு விதைகள் செழித்துக் கொழிக்கட்டும். (அதர் 6)

த.கோ - தி.பூரீ 冲、