பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

ாங்களுக்கு நுண்ணறிவு அளிப்பாய். மெய்மையையும், பொய்மையையும் நன்கு பகுத்தறியும் வேறுபாட்டைக் காட்டி அருள்வாய். (இருக் 3)

தெய்வீக நிலையின் கொடுமுடியை அடைய எனக்கு வலிமை அளிப்பாய். (யசுர் 9)

யோகப் பயிற்சிகள், தியானம் இவற்றின் மூலம் சங்களுக்கு அறிவுத்திறன், ஆற்றல், அழகு, யாவும் இடுகின்றன. உலகத்தைப் படைத்தவரும் கோவேந்தனாய் இருக்கிறவனுமாகிய அனைத்தாற்றலுமுள்ள இறைவனின் பேருலகில் எங்களுக்கு நிலையான ஒளி, வலிமை, பார்வை யாவும் அருளப்பட்டுள்ளன. (யசுர் 11)

உயர்ந்த எண்ணங்கள் உன் நெஞ்சத்தில் ஆட்சி செலுத்தட்டும். (யசுர் 12)

யோகத்தினாலும் இறையருளாலும் பொருள் உலகிலிருந்து வெளிக்கிளம்பி மேலுலகின் உயர்ந்த பகுதியை சென்றடைவேன். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நிலையான மகிழ்ச்சி, ஒளி, வாழ்நாள் இவற்றை அடையும் பொருட்டுத் தெய்வீக அமைதி ஆட்சிப் பரப்புக்கும் செல்வேன்.

(யசுர் 17)

த.கோ - தி.பூரீ