பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

நிலையான வாழ்வு

தலைவ, தெய்வீக ஒளியுடன் நீ விடிந்தொளிர்கிறாய், அவியுணவுகளினால் நீ தொழப்படுகிறாய். நான் மரிக்கும் மாந்தன், இறப்புக்கு உட்பட்டவன்தான். எனினும் உன்னைப்போல நானும் இறப்பற்றவனாக இருக்கக் கூடாதா? (இருக் 8)

தெய்வீகப் பெரு மகிழ்ச்சி நிறைந்த இடம் விண்ணகம் இருண்மை என்பதே கிடையாது அங்கே. எந்த ஓர் எண்ணமும், ஆசையும், கோரிக்கையும் நிறைவேறுமிடம் அது. ஆன்மிக விடுதலை பெற்று, வற்றாத முகிழ்ச்சி வாழும் இடம் அது. * * ஒளிக்கு மூல முதலாகிய ஒளிமயமான் இறைவனின் அருளைப்பெற என் மனம் அவனை நாடட்டும். ஒ மனமே, ஓடோடிச் சென்று நிலைத்த பேரின்பத்தின் பிறப்பிடத்தை அடைந்திடுவாய். (இருக் 9) #

த.கோ - தி.யூரீ