பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மனித உயிர்

அழகான சிறகுகளுடன் கூடிய கடவுள், உள்ளுயிர் ஆகிய இரண்டு பறவைகள் ஒரே மரத்தில் அன்புடன் இணைந்து அமர்ந்திருந்தன. அவற்றில் உயிர் பழங்களைச் சுவை பார்த்து மகிழ்கிறது. பழங்களைக் சுவைக்காமலே மகிழ்ச்சியோடிருக்கிறான் கடவுள். (இருக் 1)

ஒளிமயமான ஆற்றல் படைத்த ஆன்மாவின் வீர தீரச் செயல்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை எனக்கருள்வாய். மூட நம்பிக்கை, இருண்மையான எண்ணங்கள் என்கிற முகில் திரையை அகற்றி இடர்களைக் கடக்கும் மெய்யறிவை இறைவன் அருள்கிறான். (இருக் 1)

இறைவன் மனிதனின் வல்லமையை மெய்சார்ந்த, மனம் சார்ந்த ஆன்மிகம், ஆகிய மூன்று வழிகளில் முறைபடுத்துகிறான்.

நற்றமிழில் நால் வேதம்