பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

அவனுடைய மனத்திடத்தை அதிகரித்து கீழ்நிலையான உடல்சார்ந்த ஆசைகளை அடங்கச் செய்கிறான்.

(இருக்1)

ஆன்மா உறுதியுடனிருக்கும்போது கீழான உணர்ச்சிகள், புலர்ந்த எண்ணங்கள் ஆகிய கீழ்நிலை உணர்வுகள் நமக்குக் கெடுதல் இழைக்கமுடியாது. நமக்கும் போட்டியின் முடிவில் ஆன்மாவே தீய சக்திகளை முறியடித்து வெற்றி காண்கிறது. (இருக் 1)

இயங்குதினை இயங்காத்திணை, நமது உணர்ச்சிகள், எழுச்சிகள் வெற்றி கொண்டு, t பலம் பொருந்திய ஆன்மிக ஆற்றலைப் படைத்த ஆன்மாவே தனிப் பேரரசாக விளங்குகிறது. மக்கள் யாவருக்கும் ஒரே தலைவன் இறைவனே. ஆழியின் ஆரக்கால்களையெல்லாம் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வட்டம் போலச் செயல்கள் யாவும் அவனுடைய ஆளுகைக்கு உட்பட்டவையே. (இருக் 1)

ஆன்மிக ஆற்றல் பெற்று உள்ளுயிர் தனது பெருமிதமான ஆற்றலினால் எதிரிகள் யாவரையும் முறியடிக்கிறது. கருவறைகளைத் தகர்த்தெறிந்து மூட நம்பிக்கைகளின் நெஞ்சத்தை அடைகிறது, தீய ஆற்றல்களை வேரறுத்து வெற்றிக் களிப்பில் ஆழ்ந்து நிற்கிறது. (இருக் 1)

த.கோ - தி.பூதி