பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59

என்கிற படையைக் கைக்கொண்டு அழிக்கும் வன் பேராசைகளை அடக்கி வெற்றி கொள்கிறாய்.

(இருக் 1)

உனது தெய்வீகத் தன்மை மற்றெல்லா ஆற்றல்களையும் விட வலிமை வாய்ந்தது. செல்வத்தில் உன்னை விஞ்சுகிறவர்கள் மீதும் நீ ஆட்சி செலுத்துகிறாய். இருட்டின் வல்லமைகளை முறியடிக்கிறாய். உனது இயல்பான ஆற்றல், தேடிக்கொண்ட பெருமை ஆகியவற்றால், புலன் வல்லமைகளை விடவும் மேலான நிலையை நீ அடைகிறாய். (இருக் 1)

மரத்தில் வாழ்கின்ற பறவைகள் மரத்திற்கே திரும்புகின்றன. - அங்கு அந்தப் பறவைகள் பழங்களைச் சுவைத்து எவ்வளவு இனிப்பு என்று பேசிக் கொள்கின்றன. ஆனால் கடவுளை உணராதவன் அன்பார்வம் என்கிற பழச்சுவையை அறியமாட்டான்.

(இருக் 1)

உள்ளுயிர் அழிவற்றது. அழியும் உடல் ஒவ்வொன்றும் முன் வினைகளுக்கு ஏற்ப ஆன்மாவினால் ஊட்டம் பெறுகின்றது. (இருக் 1)

த.கோ - தி.யூரீ