பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

தோழமை

அண்டம் சார்ந்த ஆன்மாவுடன் இணைந்திடு. இதுவே உனது மனத்தில் வைத்துள்ள முடிவான ஆசையாய் இருக்கட்டும். இதுவே உனது கடைசி வழிபாடாக இருக்கட்டும். உனது தனித் தன்மையை உதறித் தள்ளிவிட்டு உலகமளாவிய நிலையில் உன்னை ஒருமைப்படுத்திக்கொள். தொலைவு என்கிற எண்ணம் வேண்டா, எந்தவிதமான வேறுபாடும் பாராட்ட வேண்டா. உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் ஒரே உலகம் என்ற எண்ணத்தில் எழும் வாழ்க்கையின் ஒரு பகுதியே. படைப்பு என்பது படைப்பாளியின் நிழலைத்தவிர வேறில்லை. மனித முயற்சிகளின் ஒட்டுமொத்தமான பயன்தான் ஒற்றுமை காணும் பட்டறிவு. (இருக் 8)

நற்றமிழில் நால் வேதம்