பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 ש"י ஊருக்குப் புதியவன் உள்ளூர்க்காரனை வழி கேட்கிறான்.

அவன் காட்டிய வழியில் தன் பயணத்தைத் தொடர்கிறான். பின்பற்ற வேண்டிய முறை இதுதான். J இதன் பயனாக நாம் சரியான வழியைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. (இருக் 10)

தெய்வீக மெய்யறிவு பெற்ற, ஆன்மிகப் பயிற்சி பெற்ற மாணவர் புரியும் செயல்கள் இரு உலகையும் பலப் படுத்துகின்றன. தெய்வீக ஆற்றல்கள் யாவும் தனது குறிக்கோளில் அவன் வெற்றி பெற வாழ்த்துகின்றன. மண்ணகம், விண்ணகம் இரண்டினுடைய பண்பு நலன்களை அவன் பின்பற்றுகிறான். முனிவர்களின் எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து தெய்வீக ஆசானை நிறைவுறச் செய்கிறான். (அதர் 11) எவ்வாறு ஒரு தாய் தன் குழந்தையை அரவணைத்துத் தன் கருவில் சுமக்கிறாளோ, அதே போன்று ஆன்மிக ஆசான், தன் மாணாக்கர்களுக்குக் கற்பிக்கும் பொழுது தன் அன்பு உள்ளத்தில் அவனுக்கு இடமளிக்கிறார். அதன் பின்னர் தெய்வீக ஆற்றல்களை யெல்லாம் அந்த மாணாக்கனுக்கு அருள் செய்திட வாழ்த்துக் கூறுகிறார். (அதர் 11)

ஆன்மிகப் பயிற்சியையே நோக்கமாகக் கொண்ட இந்த புனித வேள்வியில், நிலம், வான், நடுவெளி, ஆகியவற்றின் தெய்வீகத் தன்மைகள் ஆன்மிகப்பயிற்சிக்கு இட்டுச்

த.கோ - தி.யூரீ