பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் படைக்கப்பட்ட இந்தச் சூழ்நிலையில் இருக்கு, சாம, யசுர், அதர்வ ஆகிய நான்கு 照 வேதங்களும் தோன்றின. (இருக் 10) *

உலகம் படைக்கப்பட்ட காலத்தில் மூன்று வகையான உயிரினங்கள் உருவாயின. வளர்ப்புயிர்கள் என்ற வரிசையில் நான்கு வகையான உயிரிகள் உள்ளன. குதிரைகள்,கழுதைகள் ஆகியவை; இவற்றிற்கு மேல்வரிசையிலும், கீழ் வரிசையிலும் பற்கள் உண்டு. பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், இவற்றிற்கு கீழ் வரிசையில் மட்டுமே பற்கள் உண்டு. - (இருக் 10)

சீரிய சிந்திக்கும் திறன் காரணமாக, உலகம் தோன்றிய காலத்திலிருந்தே உயிரினங்களிடையே, மனிதனே மிகுந்த முன்னேற்றம் அடைந்தவனாக மதிக்கப்படுகின்றான். மனித இனத்திலும் தங்கள் தங்கள் தெய்வீகத் தன்மைகளை உணர்த்திய அறிவர்கள், யோகிகள், முனிவர்கள் இருந்தனர். இவர்கள் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர்கள். சமுதாயத்தை எவ்வாறு ஒருங்கினைப்பது, ஒழுங்கு படுத்துவது என்பதிலேயே தீவிரமாக சிந்தனை வேத்தியவர்கள் இவர்கள். (இருக் 10)

மானி இனம் முழுவதுமே தனி மனிதன் என்கிற வகையில் கணக்கெடுத்துக் கொள்ளப்பட்டது.

த.கோ - தி.யூரீ