பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

இப்பொழுது சில வினாக்கள் எழுந்தன: மனிதன் என்கிற உருவ அமைப்பு எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது? வாய், தோள்கள், தொடை, பாதம், ஆகிய அங்கங்கள் எந்தெந்த வண்ணங்களைக் குறிப்பிடுகின்றன?

(இருக் 10)

சமுதாயத்தை இந்த நோக்கில் பார்க்கும் பொழுது புலப்பட்டது. மிகுந்த அறிவுக் கூர்மை வாய்ந்த அந்தணர்கள் வாயையும், ஆள்திறன்களும், போர்வீரர்களுமாகிய மன்னர்கள் தோள்களையும், கைத்தொழில் வல்லுநர்கள், வணிகர்கள், வேளாளர்கள் வயிற்றின் அடிப்பகுதி தொடைகள் இரண்டையும், உழைப்பாளர்கள் அடிகளையும் எதிர்நோக்கின்றனர்.

(இருக் 10)

நிலவு அனைத்து வல்லமையுள்ள இறையின் உள்ளத்தையும், ஞாயிறு அவன் கண்களையும் குறிப்பிடுகின்றன. காற்றும் மூச்சும் அவனுடைய காதுகளிலிருந்து வெளியேறுகின்றன. நெருப்பு வாயிலிருந்து கிளம்புகிறது. இது போன்றே மனிதனுடைய மனத்துடன் தொடர்புடையது கண்களுடன் தொடர்புடையது ஞாயிறு வெண்ணிலவு.

(இருக் 10)

நற்றமிழில் நால் வேதம்