பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மனித சமுதாயத்தில் உயர்ந்த, நடு நிலையான, தாழ்ந்த என்கிற நிலையே கிடையாது. ஈடுபாட்டுடன் உழைத்து, ஒவ்வொருவனும் முன்னேற்றப் பாதையில் நடை போடுகிறான். நிலத்தாயின் இயற்கைச் செல்வங்களை மக்கள் நல்வாழ்விற்குப் பயன்படுத்திக் கூரிய அறிவுடையவர்களாயும், சிறந்த குணநலன்கள் கொண்டவர்களுமாக உள்ள இந்த மனிதர்கள் முன்னேற்றம் காண்கிறார்கள். (இருக் 5)

தான் ஈட்டிய பொருளைச் சிறந்த காரியங்களுக்குச் செலவிடாமலும் தம் நண்பர்ககளின் வளர்ச்சிக்கு உதவிடாமலும் தன் தேவைகளை மட்டும் நிறைவு செய்து கொள்பவனாயிருக்கிற செல்வன் தன்னலக்காரன். தீவினையின் கூலிதான் அவனுக்குக் கிடைக்கும். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாமலும் பயன்படுத்தப் படாமலும், ஒருவருடன் இருக்கும் செல்வத்திற்குப் பொருள் இல்லை. இவ்வாறு குவிக்கப்படும் செல்வம் முடிவில் அவனுடைய அழிவிற்கே காரணமாகிறது. (இருக் 10)

ஏர் கொண்டு உழுகிற வேளாளன் மக்களுக்காக உணவைச் செழிக்கச் செய்கிறான்.

ஒழுங்கான அடி எடுத்து வைப்பவன்தான் தொலைவைக் கடந்து சேருமிடத்தை அடைகிறான்.

நற்றமிழில் நால் வேதம்