பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.92

வினைப்பயனின் சட்டத்தில் பிழை இருப்பதில்லை. ஒதுக்கீடு கிடையாது. நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் செயற்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. செயல்கள் அவற்றின் எதிர்விளைவுகள் ஆகியவற்றின் முறையான கணக்கெடுப்புதான் அது. எதைச் சமைக்கிறானோ அதையே மனிதன் உண்கிறான். அதாவது எதை விதைக்கிறானோ, அதையே அறுவடை செய்திடுகிறான். (அதர் 3)

கேடு செய்யும் எண்ணத்திலிருந்து விடுபட்டு எல்லோருடனும் நட்புணர்ச்சியுடன் பழகி ஒற்றுமையாயிருக்க உனக்கு நான் வாழ்த்துக் கூறுகிறேன். புதிதாய்ப் பிறந்த கன்றுக்குட்டியைப் பசு விரும்புகிறாற்போல் ஒருவரையொருவர் விரும்புங்கள். (அதர் 6)

உங்கள் எண்ண அலைகள் ஒரே சீராகயிருக்கட்டும். ஒரே குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள். இடையூறுகளைக் கடக்க என் உதவி உங்களுக்கு உண்டு. உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் ஒன்றிணைக்கும் வழியை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். (அதர்)

உலகத்தை விரும்பு, சமூகத்திற்கு மதிப்பளி. பசித்தோருக்கு உணவளித்து, துன்பமுற்றோருக்கு உதவி புரிந்து, சமூகத்திற்குப் பாதுகாப்பளி.

நற்றமிழில் நால் வேதம்