பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

கடமையின் நெறி

செங்கதிர், வெண்கதிர் போல், தடுமாற்றம் ஏதுமின்றி, கடமையின் நெறியில் செல்வோமாக. சேவைக்கு ஊதியம் எதிர்பார்க்காமல் மாந்தரினத்திற்கு என்றும் பணிபுரிந்திடுவாயாக. பெருந்தன்மை, அன்பு, ஈகம், விருபபு, வெறுப்பு இல்லாமை ஒத்துப்போகும் தன்மை ஆகிய நற்குணங்களை என்றும் கடைப்பிடிப்போமாக. அனைத்தையும் இறைவனுக்கு அளித்துவந்து விட்டு, ஞாயிறு திங்கள் போன்று மாந்தர் இனத்துக்குப் பணி செய்வோமாக. (இருக் 5)

©Ꮚ

நற்றமிழில் நால் வேதம்