பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

f 200

நேர்மையான, உள்ளம் கொண்ட நாணயமான மனிதன் நிறைந்த புகழை எளிதாகவே அடைகிறான். (யசுர் 2)

மனிதர்கள் யாவரும் உடன்பிறந்தோர்களே, நிகரானவர்களே. சிறியவர், பெரியவர் என்கிற பாகுபாடு எதுவும் கிடையாது. (யசுர் 16)

தகுதியுள்ளவரிடையே உன் செல்வத்தைப் பகிர்ந்தளி. வாழ்க்கையின் விலை மதிக்கமுடியாத களஞ்சியமாகிய கடவுளின் கருணையை வேண்டி நின்றி.டு.

(சாம 24)

உனது உள்ளத்தில் உறுதியான குறிக்கோளிருந்து அதை எட்டிடக் கடுமையாக உழைக்கையில்

இறைவன் உறுதியாக அருள் புரிவான். (இருக் 5)

உடலையும், உள்ளத்தையும் இன்னலமாய் வைத்துக்கோள். விரும்பும் குறிக்கோளை அடைய இவைதாம் முதற் படிக்கட்டுகள். (இருக் 8)

அச்சமின்றி உண்மையை வெளியிடும் அறத்தின் வல்லமை,

சமூகத்தை வழி நடத்தும் தலைவர்களுக்கு இருக்க வேண்டும். (இருக் 8)

பிறவி மூதறிஞர்களும், அறிவாளிகளும் மட்டுமே உண்மையைப் பேசுகிறார்கள். (இருக் 9)

நற்றமிழில் நால் வேதம்