பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7

தன் தாயார், தகப்பனாரை எவனொருவன் நன்கு மதிக்காமல், முறையாகக் கவனிக்காமலிருக்கிறானோ, அவன் துயர்களையும், துன்பங்களையும்தாம் நுகர்கிறான். எவனொருவன் தாயாரையும் தகப்பனாரையும் நன்கு மதிக்கிறானோ, அவன் வாழ்த்தப்படுகிறான். தன் நண்பர்கள், நல்ல மனிதர்கள் ஆகியோரால் பாராட்டப்படுகிறான். (இருக் 4)

அனைத்து வல்லமையுள்ள இன்றவன் தனது உயிர் வலுவினால் புது மணமக்களின் நெஞ்சங்களில் தெய்வீக அன்பை நிறைக்கிறான். (இருக் 5)

திருமணமான பெண்கள், உயர்குலப் பெண்களாகவும், சிறந்த மனைவிகளாகவும் கண்களில் மையிட்டு, உடலில் நறுமணம் பூசித் தங்கள் தங்கள் இல்லங்களில் இருக்கட்டும். அணிகலன்கள் அணிந்து மகிழ்ச்சியாகவும்,

நல்ல உடல் நலத்துடனும் இருக்கட்டும். (அதர் 12)

நீ எப்படியிருக்கிறாயோ, நானும் அப்படியே இருக்கிறேன். நான் எப்படியிருக்கிறேனோ அப்படியே நீயும் இருக்கிறாய். நான் இறைவணக்கப் பாடலாயிருக்கிறேன், நீ பாடகனாயிருக்கிறேன். நான் விண்ணகம். நீ மண்ணகத் தாய். மக்கள் பேற்றுக்காக நாம் இணைந்திருப்போம்.

(அதர் 14)

த.கோ - தி.பூரீ