பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22O

அரசன், அரசவையினருடையவும், படையினருடையவும் பேரன்புக்கு ஆளாகிறான். (அதர் 15)

தீய செயல்கள், துயரம்,எதிரிகள் முகமன், செய்கிறவர்கள், இரண்டகக்காரர்கள் எங்குமே எவருமே அரசனை அணுக முடியாது. படைத்தலைவன், நம்பிக்கைக் கேடர்களையும் கேடு நினைப்பவர்களையும் - துரத்தியடித்து அரசனைப் பாதுகாக்கிறான்.

(இருக் 2)

இறையின் நல்லாசி பெற்ற முனிவனோ, தலைமையான அரசனோ ஒரு நாளும் தோற்கடிக்கப்படுவதில்லை, கொல்லப்படுவதில்லை, அழிக்கப்படுவதில்லை, எந்தத் துயரத்தாலும் தாக்கப்படுவதில்லை, இறைவன் அளித்த பெருவளங்களும் குறைவதில்லை.

(இருக் 5)

ஓ, அரசனே, பாறை போன்று நிறைந்தவனாக, உறுதியான உள்ளம் கொண்டவனாக இருப்பாயாக. * கடமையைச் செய்வாய். - (யசுர் 2)

பேரரசின் வல்லமை வாய்ந்த அரசன் நீ, ஈடிணையில்லாத திண்மை உன்னுடையது. தீய எண்ணம் கொண்ட எதிரிகளை அழிப்பவன் நீ.

நற்றமிழில் நால் வேதம்