பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

கைவினைஞர்களுக்கு வணக்கம்

திறமை வாய்ந்த கைவினைஞர்களே, நீங்கள் கட்டுமான வேலைகளில் நல்ல பயிற்சி பெற்றவர்கள். நிறைந்த செல்வமும், சிறப்புரிமையும் படைத்தவர்கள். இறைவனிடமிருந்து நல்ல திறமை பெறும் நற்பேறுடையவர் நீங்கள். எங்களுக்கு வெற்றி மேன்மையை வழங்கிடுங்கள். உங்களிடமுள்ள தன்னலமற்ற சேவை மனப்பான்மையையும் தாராள மனப்பான்மையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

(இருக் 4)

நிலம், விசும்பு, தகவல் தொடர்பு முறைகளின் முன்னோடிகளே, உயர்ந்த செயல்களால் எங்களுக்கு ஊக்கமளிக்க முன் வாருங்கள். காலமெல்லாம் வளமை பெறுவதற்கான பயனுள்ள வேலையில் ஈடுபடும் மரபை நிலைநிறுத்தும் சிறந்த முன்னோடிகள் நீங்கள். (இருக் 4)

த.கோ - தி.புதி