பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

ஆற்றல், நாளில் ஆறுகளாகிற

உடன்பிறந்தாள்களிடமிருந்து

ஊட்டம் பெற்று இயற்கையின் மடியில் அமைந்திருக்கிறது (இருக் 3)

வையகத்தின் ஆற்றலே, உலகைப் படைக்கும் பொறி, நீரின் கரு; மனித குலத்திற்குத் தலைமை வகிப்பது. மனித இனத்தின் பாதுகாவலன். தனது சொந்த ஒளியினாலேயே ஒளியாய்த் திகழ்கிறது. தனது படைப்புகளுக்கு அரவணைப்பு அளிக்கிறது.

(இருக் 3)

உண்மை எது என்பதை யாரறிவர்? அறிந்தும் உரைப்பவர் எவர்? தெய்வீக ஆற்றல்களின் உறைவிடத்திற்கு இட்டுச் செல்லும் முறையான பாதை எது? அவை வாழும் தாழ்ந்த இடங்கள்தாம் சட்டென்று நினைவுக்கு வருகின்றன. திகைப்பூட்டுகின்ற உயர்ந்த இடங்கள் தோன்றுவதில்லை. * (இருக் 3) வன்மை பொருந்திய வையக ஆற்றலின் தீப்பொறிகள் தேவர் தலைவன் சுழற்றியெறிந்த இருதலைச் சூலம் போல் கீழே இறங்குகின்றன. காடுகளை அழிக்கும் நெருப்புபோல் எரிக்கும் அஞ்சத் தக்க இந்தத் தீப்பொறிகள் அற்பக் கழிவுப் பொருள்கள் யாவற்றையும் எரித்துச் சாம்பலாக்கி விடுகின்றன. (இருக் 3)

நற்றமிழில் நால் வேதம்