பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231

உன் வாழ்க்கையின் எந்தக் கால கட்டத்திலும் எந்த வகையிலும் கடன்பட்டிராதே. கட்டற்று இரு. 7 - هـ

- (அதர் 6)

ஓ, மனிதனே, எழு! வீழ்ச்சி என்பது உனக்கில்லை, தடைகளைத் தவிர்க்கும் கூரிய மதி நுட்பத்தை உனக்கு மாத்திரமே இறைவன் அருளியிருக்கிறான்.

(அதர் 8)

பொய் முகங்களை ஒதுக்கி விட்டு, நிலைத்திருக்கும் உண்மையான குறிக்கோள்களையே ஏற்றுக்கொள்ள உறுதி கொண்டிருக்கிறேன். (யசுர் 1)

கற்றுணர்ந்த முனிவர்களுக்கும், உன் பெற்றோருக்கும் போற்றுதல் செய். அவர்களை நன்மதிப்புடன் நடத்து. (யசுர் 2)

தெய்வீக ஒளி, மகிழ்ச்சி இவற்றின் வற்றாத பட்டறிவின் அடையாளமாக விளங்கும் "ஓம்" என்கிற ஒரெழுத்து மந்திரம் உன் நெஞ்சில் என்றும் நிலைபெறட்டும்.

(யசுர் 2)

நம்பிக்கையுடன் இரு. உன்னை எங்கும் வெல்ல முடியாது. எவராலும் வெல்ல முடியாத வீரனுடைய ஆற்றல் உன்னுடையது. (யசுர் 5)

த.கோ - தி.ழரீ

§