பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

தீத் தெய்வம், ஆழ்ந்த சிந்தனைக்கும் தீவிர தேடுதலுக்கும் பிறகு திட உள்ளங் கொண்ட தேடுபவன் நிலவுலகின் கொடுமுடியாகிய மண்ணகமென்கிற தாமரைக் குளத்திலிருந்து உன்னைக் கண்டுபிடித்தான். (இருக் 6)

மேலுலகிலிருந்து வெளிவந்து உலக முழுவதும், நடமாடித்திரிந்து வரும் உன்னுடைய ஆற்றலும், வெப்பமும் எங்கள் வழிச் செல்கையில் எங்களுக்கு யாதொரு தீங்கும் செய்யாதிருக்குமாக, காற்றைத் திணிப்பவனே, நோயைத் தீர்த்து வைக்கும் ஆயிரம் மருத்துவப் பொருள்களை வைத்திருப்பவனே, எங்களுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்காமலிருக்கவும்.

- (இருக் 7)

இன்னிசை எழுப்பும் புல்லாங்குழல் உடையவனும், பொங்கியெழும் கடலலைகளின் மேல் வீற்றிருப்பவனுமான தெய்வீகக் கவிஞன் பரந்திருக்கும் விண்ணின் மேற்கவிகையில் தவழ்ந்து வருகிறான். - (சாம 6)

சீரான ஒலியுடன் மிதந்துவரும் இந்தத் தெய்வீக இசை உலக முழுவதையும் வெள்ளக் காடாக்குகிறது. - வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் r பொருளறிவைப் பரப்புகிறது.

த.கோ - தி.புதி