பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;

14

இந்த இன்னிசையில் கட்டுண்ட அன்பர்கள் தங்கள் மெய்யறிவை வளர்த்துக் கொள்கின்றனர்

(இருக் 5)

இறை உணர்வின் புத்துணர்ச்சி அளிக்கும் பேரொளி சுறுசுறுப்புள்ள மனிதர்களைத் தாமதமின்றி அவரவர் இலக்கிற்கு - இட்டுச் செல்கிறது. ஒளி வெள்ளத்தைச் சிதறும் உதயப் பொழுதே, நீ வருகை தருகையில் பறவைகள் ஓய்வெடுத்துக் கொள்ளாமல் மேலும் மேலும் பறக்கின்றன. (இருக் 1)

உதயப் பொழுது செங்கதிர் தோன்றுமிடத்திற்கு அப்பாலிருந்து ஒளியைப் பெறுகிறது. செழுமையின் மேல் தளத்திலிருந்து வெவ்வேறு திசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது. (இருக் 1)

உலகின் அழிவில்லாத தன்மை அழிவுள்ள மனிதர்களின் நெஞ்சங்களில் இடம் கொள்கின்றன. நல்லது எண்ணி முன்னேறிச் செல்லும் அவர்களுக்குத் தன் வாழ்த்துகளைக் கூறுகிறது. அருளை எதிரொலிக்கும் ஆன்மிக ஒளியின் துணை கொண்டும், மெய்யறிவின் அனைத்து மறைபுதிர்களையும் உணர்ந்த நிலையிலும் அது நாலா திசைகளிலும் ஒளி வீசுகிறது. (இருக் 3)

நற்றமிழில் நால் வேதம்