பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

பேரண்டம்

யாவற்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பேரண்டமாகிற அழிவில்லாத ஆழி பரந்த விண்வெளியில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. ஆற்றலுடன் சேர்ந்த இறைவனின் மதி துடபம் முழுமையான இந்தப் பேருலகத்தைக் கட்டி ஆள்கிறது அனைத்துலகங்களும் கோள்களும் இந்த ஆற்றலைத் தான் சார்ந்திருக்கின்றன; அடிப்படையாய்க் கொண்டுள்ளன. (அதர் 9)

இந்தப் பரந்த வெளியில் மனம், உயிர்ப்பாற்றலான மூச்சு, பெயர் யாவும் இடம் பெற்றுள்ளன. இந்த இயற்கை ஆற்றல்கள் யாவும் இறைவன் நெருங்குகையிலேயே தங்களைத் தாங்களே மகிழ்வித்துக் கொள்கின்றன. இதே பரந்த வெளியில் கண்டிப்பு, பெருமிதம் விரிந்து பரந்த பேரண்டம், வேத அறிவு எல்லாமே நிலை பெற்றுள்ளன. இறைவன் எல்லோருக்கும் தலைவன். (அதர் 19)

நற்றமிழில் நால் வேதம்