பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

பொறுத்து இந்தக் கோள் அமைப்பில் மனிதன் பிறவி எடுக்கிறான். (இருக் 10)

jo இறைவன் உயிரின்றி இருக்கிற தொடக்க காலம் தொட்டு

இருண்மை நிலையைக் கடந்துள்ளான். அவன் பெரிய வலிமையுடையவர், அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன் பல இடங்களிலும் ஒரே நேரத்தில் இருப்பவன், கண்ணைக் கூச வைக்கும் ஒளி உள்ளவன். உள்ளுணர்வு மூலம் இறைவனை அறிந்த மனிதன் இறப்பச்சத்தை வெற்றி கொள்கிறான். இவை நீங்கலாக பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்தும், பல்வேறு இன்ப, துன்ப நிலையிலிருந்தும் மனிதனுக்கு விடுதலையே கிடையாது.

(இருக் 10)

பேரண்டம, உயிர்வாழும் இனங்கள் ஆகியவிற்றை, அண்டத்தைப் படைக்கும் முன்பாகத் தொடக்க காலம் தொட்டு உள்ள பேரொளிப் பிழம்பான கோளம் ஆகியவற்றைப் பல்வேறு வகைகளில் படைத்த அனைத்து வல்லமையுள்ள இறைவன் படைப்பு என்கிற கருப்பையில் செய்தபோதிலும் அவன் ஒரு பொழுதும் பிறப்பதில்லை. அறிவாளிகள், கடவுளைப் பற்றிய சிந்தன்னயில் இருந்தபோதிலும் இறைவன் கருவில் வாழ்கிறான். என்பதை உள்ளுணர்வு மூலம் அறிகிறார்கள். விண்மீன் கூட்டம், பேரண்டச் செங்கதிர்கள், விண்கோள்கள், உலாவரும் வீதி, இவை போன்றவை

நற்றமிழில் நால் வேதம்