பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

அழகிய காலைப்பொழுது மக்களைத் துயிலெழுப்புகிறது. நடப்பதற்கு ஏற்றதாக வழியினைச் சீராக்குகிறது; மேலே வழி நடக்கிறது. ஊக்குவிக்கும் சிறந்த ஆற்றலாகிய அவன் தன் மேன்மை மிக்க தேரைச் செலுத்திச் தனது ஒளியைப் பகலின் தொடக்கத்திற்கு முன்னே பரப்புகிறான்.

(இருக் 5)

கருஞ்சிவப்பான எருதுகளைத் தன் தேருக்குப் பூட்டி, எவரையும் நோகச் செய்யாமல் என்றும் நிலைத்திருக்கும் செல்வத்தை அளிக்கிறான். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நெறி அமைக்கிறான். எல்லோராலும் போற்றிப் புகழப்பட்டுத் தான் அளிக்கும் ஒவ்வொரு வாழ்த்துடனும் தன்னை மெருகேற்றிக் கொள்கிறான். (இருக் 5)

காலைப் பொழுதின் பொன் ஒளிக்கீற்று ஒருவனின்

வாழ்க்கையில் தெய்வீக ஒளியை நிரப்புகிறது.

(антио 303)

நிறம் மாறி ஒளி பெருகித் தோற்றமளிக்கும் அவன் கிழக்குத் திசையிலிருந்து தன் உடல் வண்ணத்தை வெளிபடுத்துகிறான். செல்லவேண்டிய வழித் தடத்தை செம்மையாகப் பின் பற்றுகிறான். பொருண்மைகண்ள நன்குதெரிந்து வைத்துள்ளவன்போல், வழி மாறிச் செல்வதில்லை. (இருக் 5)

த.கோ - தி.புதி