பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 1 "ঃ செங்கதிர் சீரொளி வீசுகிறான்.

கூடவே ஒளி படாத பகுதிகளையும் மிளிரச் செய்கிறான். என்றும் நிலைத்திருக்கும் புடவியின் ஒழுங்குகளுக்கேற்ப காலைப் பொழுதுகளுக்கு ஒளியூட்டுகிறான். அண்டத்தின் அறங்களுக் கேற்பத் தெய்வீகக் கதிர்களுடன் கூடவே அவன் நகர்கிறான். மகிழ்ச்சியடையச் செய்யும் நரம்பு மையங்களை அவன் மாந்தர்களுக்கு அருள்கிறான். (இருக் 6)

ł

மாந்தர்களின் நல்ல, தீய செயல்களைக்

கண்காணித்து வரும் பகலவன்

அவர்களுடைய எண்ணங்களை எதிர்ரொலிக்கிறான்.

(இருக் 6)

தனது பாதுகாப்பைக் கதிரவன் நமக்கு அட்டியில்லாமல் அளிக்கட்டும். ஆறு முகில்கள், மருந்துச் செடிகள், பசுமை, இவை யாவும் நமக்கு மகிழ்ச்சியைத் தரட்டும். தீத்தெய்வம் நமது தந்தையாக இருக்குமாறு வேண்டுவோம். (இருக் 6)

செங்கதிரோன் தனது பொன் மயமான தோள்களை நம் பக்கம் நீட்டுவானாக.

சிறந்த ஒரு பேச்சாளனைப்போல் நமக்கு உந்தாற்றல் ஊட்டுவானாக. (இருக் 6) செங்கதிர்த் தேவன் ஒளி வட்டத்திலிருந்து 1£ தனது பொன்னிறப் புத்தொளியை . வானகத்தின் மேல் பாய்ச்சுகிறான்.

த.கோ - தி.யூரீ