பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

தீவனத்தின் தேவையில்லாத எந்தக் குறிப்பிடத்தக்க அடையாளமுமில்லாத நீரைப் பரவலாகிற, உதிர்க்கிற, விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்கிற இந்தத் தேர் விண்மீன் இடைவெளி எங்கிலுமாக ஊர்ந்து செல்லட்டும். (இருக் 6)

தென்றலின் மூச்சுக் காற்றில் வானத்தில் ஊர்கின்ற முகில்கள் விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வருகின்றன. பல்வேறு வண்ணங்களில், அழகு மிளிர இங்குமங்கும் ஆடி அசைந்து, பொங்கிப் பெருக்கெடுத்து இந்த முகில்கள் மழைபொழிந்து உயிரளிக்கும் அமுத துளிகளினால் நம் நிலத்தை நனைக்கின்றன.

(இருக் 7)

ஒ, கொண்டல்களே, மின்னி ஒளிரும் உங்கள் அணிகலன்கள் உம் தோள்களில் தவழட்டும். ஒளிரும் ஆரங்களான அவை மதாணிகளாக உங்கள் மார்புக்கு அணி செய்கின்றன. மழைத்துளிகளால் மின்னிக்கொண்டு ஒளிச்சிதறல்களாய் நீங்கள் உங்கள் மின்னொளிப் படைகளைச் சுழற்றி மழைத் தாரையை எங்கும் பொழிகிறீர்கள். &n

(இருக் 7)

விரைவாய் நகர்ந்து கொண்டிருக்கின்ற இந்தக் காற்றுகள் ஆர்வமாகத் தொழுபவனுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. வலிமையாளரின் வலத்தை அடிபணிய வைக்கின்றன.

தகோ - தி.யூரீ .تشس