பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291

காட்சி தரும் மன்னர்கள் போல், மக்கள் தலைவர்களாகப் பணிபுரியும் போர் வீரர்கள் போல. மார்பில் அணிந்திருக்கும் தங்க அணிகலன்கள் நெருப்பு போன்று ஒளிவீசும், தங்களைத் தாங்களே நுகத்தடி பூட்டிக் கொள்ளும் காற்றுகளே, அவர்கள் உடனுக்குடன் உதவி கொண்டு வருபவர்கள்.

உயர்ந்த வழிகாட்டிகள், சிறந்த அறிவாளிகள் போல, நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறவனுக்கு சோமமது தகுந்த புகலிடம் அளிப்பது போல. (இருக் 10)

காற்றுகள் போல், அவர்கள் மற்றவர்களை ஒடுங்கச் செய்பவர்கள், விரைவாகச் செல்பவர்கள், தீயின் நாக்குகளைப் போல அவர்கள் ஒளிமயமாய் மிளிர்பவர்கள் கவச மணிந்த வலிமை வாய்ந்த போராளிகள் போல், தொல் பழங்கால முனிவர்களில் போற்றிப் பாடல்களாகிற பரிசை பெற்றவர்களைப் போல, (இருக் 10)

ஒரு முனையில் ஒன்றாய் இணைந்திடும், தேராழியின் ஆரங்கள் போல் விண்ணுலகத்து வெற்றி வீரர்கள் போல்

த.கோ - தி.யூரீ