பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O1

ஒ. தாய்நிலமே அந்தப் பேரொளி எங்களை இவர்களிடம் இணைக்கிறது. என்னை எவரும் வெறுக்காதிருக்கட்டும். (அதர் 12)

பாறை, மண், கல், தூசு தும்பு இவைகளால் ஆனதே நிலம். இவற்றுடன் உறுதியாய் பிணைக்கப்பட்டுள்ளது இது. பொன்மயமான மார்புடைய நிலத் தாய்க்கு

என் வணக்கங்கள். (அதர் 12)

எழுந்தாலோ, அமர்ந்தாலோ, நின்றாலோ, நடந்தாலோ எங்களுடைய வலது காலோ, இடது காலோ r நிலத்தில் என்றும் தடுமாறாதிருக்கட்டும். (அதர் 12)

தூய்மைப்படுத்தும், ஆன்மிக வன்மையினால் உறுதி பெற்றுள்ள பொறுமையின் சின்னமாகிய தாய்நிலமே, உன்னை நான் வேண்டிக்கொள்கிறேன், ஆற்றல், செழிப்பு, எங்களுக்குண்டான உணவு ஆகியவை உள்ள நிலத்தாயே. உன்மீது நாங்கள் சாய்ந்திருக்க இடமளிப்பாய்.

(அதர் 12)

எங்களது உடலங்களை மாசு படுத்தும் அழுக்கை நீக்கி தூய தண்ணி பாய்ந்து வரட்டும். எங்களுக்கு எதிராயிருப்பவர்களுக்கு நாங்கள் நல்வரவு வழங்கமாட்டோம். ஓ, நிலத்தாயே தூய்மைப்படுத்துவதைக் கொண்டு, நான் என்னைத் தூய்மைப் படுத்திக்கொள்கிறேன்.

(அதர் 12)

த.கோ سيو தி.யூரீ