பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8

நான் இயற்கையின் முறைகளை மீறியிருக்கலாம்.

壽 என் தவறுகளைக், குறைகளை மறந்து மன்னித்து விடு. jo (இருக் 1)

சில நீர் நிலைகள் தாங்களாகவே ஒன்றாய் விடுகின்றன. மற்றவை ஒன்றுடன் ஒன்று கலந்து விடுகின்றன. இணைந்து ஓடிக் கடலில் கலக்கின்றன. நீர் சார்ந்த இயக்க விசையைச் சுற்றித் தூய்மையான இந்தத் தண்ணி ஒன்று சேர்கின்றது.

-> (இருக் 2)

மலைகளின் மடியிலிருந்து ஆர்வம் கொண்ட இரண்டு பெண் குதிரைகள் தனித்தனியே மகிழ்ச்சியுடன் நகர்ந்து செல்வதைப் போல்,

இரண்டு வெண் பசுக்கள் தங்கள் கன்றுகளை நக்கிக் கொடுப்பதைப் போல், அந்த இரண்டு கால் வாய்களும் சலசலவென்று கூத்திட்டு ஓடுகின்றன. (இருக் 3)

ஒளிர்ந்து மிளிரும் நீரோட்டங்களே, இறைவனால் உந்தப்பட்டு அவன் உங்களை ஊக்கி விடட்டுமென்றே வழிபாட்டின் பயனாக நேரில் செல்வதுபோன்று கடலை நோக்கி நீங்களிருவரும் ஒருவருடன் ஒருவர் துணைகொண்டு அலைகளை எழுப்பிக் கொண்டு பாய்ந்து செல்கிறீர்கள். (இருக் 3)

ஆறுகளின் அன்னையிடம் நான் வந்து சேர்ந்துள்ளேன். பரந்த வாழ்த்துப் பெற்ற ஆற்றை

நற்றமிழில் நால் வேதம்