பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 O

இடையூறுகளைக் களையும், இறைவனின் தீரச் செயல்களும் காலம் காலமாகப் போற்றிப் புகழ்ப்பட்டு வருகின்றன. இடிபோல் அவன் தடைகளைத் தகர்த்து நொறுக்குகிறான். தங்கள் இருப்பிடம் நோக்கி தண்ணி தவழ்ந்து செல்கிறது. (இருக் 3)

"ஓ, பாடகனே, தலைமுறை தலைமுறையாக எதிரொலிக்கப்போகும் உனது இந்தச் சொற்பொழிவை மறந்திடாதே. உனது புகழ்ப் பாடல்களில் எங்களிடம் அன்பு காட்டு. r மக்களிடையே எங்களைத் தாழ்த்திடாதே, போய் வா".

(இருக் 3)

உடன் பிறந்தவர்களே, சுமை வண்டி, தேர் இவை கொண்டு நெடுந் தொலைவிலிருந்து வருகை தரும் கவிஞனுடைய கவிக் குரலைக் கேளிர். நன்கு குனிந்து அவன் அமைதியாக உன்னைக் கடந்து செல்ல வழிவிடு. உனது நீரோட்டத்தை மேற்பரப்புக்கு அடியில் அடக்கி வைப்பாய். (இருக் 7)

ஆம், பாடகனே, சுமைவண்டி தேர் கொண்டு நீ நெடுந்தொலைவிலிருந்து வருகிற காரணத்தினால், நீ கூறுவதை நாங்கள் கேட்கிறோம். சீராட்டும் தாய்போல் உன்முன் தலை வணங்குகிறோம், தன்னை மணமுடிக்கப் போகும் மணாளன் முன்னால் இளங்கன்னிபோல் உன் முன்னே நாங்கள் தலை தாழ்த்துகின்றோம். (இருக் 8)

நற்றமிழில் நால் வேதம்