பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32O

பசுக்கள் எங்கும் காணாமல் போவதில்லை, கள்வர்கள் அவற்றைத் துன்புறுத்துவதில்லை. நேயவுணர்வில்லாதவர்கள் அவற்றை மிரட்டுவதில்லை, அவற்றைத் தாக்குவதில்லை. பசுக்கூட்டத்தின் உரிமையாளன் அவற்றுடன் இணைந்து வாழ்கிறான். தெய்வங்களை வணங்குகிறான், ஈத்துவக்கும் இன்பத்தில் திளைக்கிறான். (இருக் 6)

தூசுகளைக் கிளப்பிடும் எதிரியும் கூட பசுக்களை அண்ட முடிவதில்லை. அவை எப்பொழுதும் கொலைக் களத்தைச் சென்று அடைவதில்லை. பரந்திருககும் பசும்புல் வெளிகளில் வழிபடுபவனின் பசுக்கள் பயமின்றி இங்குமங்குமாகத் திரிகின்றன.

(இருக் 6) ஓ, பசுக்களே, இளைத்துப் பரந்திருக்கும் பசும்புல் வெளிகளில் பயமின்றி மெலிந்து போயிருப்பவர்களைக் கொழுக்க வைக்கிறீர்கள். அழகில்லாதவர்களை அழகுள்ளவர்களாகச் செய்கிறீர்கள் எங்கள் வீடுகளை மகிழ்ச்சியாக வைக்கிறீர்கள் உங்களுடைய அடக்கமான பண்புகளால் சபைகளில் பெருமை கூடுகிறது. (இருக் 6)

உங்களுக்குக் கன்றுகள் பெருகட்டும், பசும்புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருப்பீர்களாக, குடிநீர் நிலைகளில் நல்ல தண்ணிரைக் குடிப்பீர்களாக கள்வனோ, கெட்டவனோ உங்கள் மேல் ஆட்சி

நற்றமிழில் நால் வேதம்