பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323

இறைவன் ஞாயிற்றை விண்ணின் நாப்பண் நிலைப்படுத்தியுள்ளான். மழைநீரை அது கவர்ந்திழுக்கிறது, நிலத்தில் பொழிவிக்கிறது, செந்நிறம் கொண்டது, நம்மை முழுமையாகக் காக்கிறது, வகை வகையான கதிர்களைக் கொண்டது, சுற்றிச் சுழல்கிறது. முகில்களையும் வெவ்வேறு உலகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, அவற்றைப் பாதுகாக்கிறது. வெளிச்சத்திற்கும் காரணமான மின்னலில் படர்ந்துள்ளது. (இருக் 5)

பனிக்காலம், இளவேனில்காலம், இலையுதிர்காலம், மழைக்காலம், கோடைக்காலம் ஆகிய பருவங்களில் எங்களைக் காத்திடு. குழந்தைகள் ஆடு மாடுகள் ஆகியவற்றை எங்களுக்குத் தாராளமாக அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திடு. உன்னுடைய தடங்கலற்ற பாதுகாப்பை அளி.

(அதர் 6)

த.கோ - தி.பூரீ

o