பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

325 "ঃ பழங்கள் பழுத்தோ பழுக்காமலோ

பூத்தால்ோ பூக்காவிட்டாலோ தேர்ந்த ஒரு மருத்துவன் தான் உண்டாக்கிய J. மருத்துவ மூலிகைகளின் மூலம் நமது நோயைக் குணப்படுத்துகிறான்.

(இருக் 10)

மருத்துவ மூலிகைகள் உடலில் புகுந்து, குருதியில் கலந்து, நோயாளியின் உடலுறுப்புகள், இணைப்புகள் இவற்றை ஊடுருவித் தேர்ந்த நடுவரைப் போல் நோயைக் குணப்படுத்துகின்ற்ன. (இருக் 10)

உயிரளிக்கும் இந்த மருத்துவ மூலிகைகள் தீங்கற்றவை, உயிரின்ப மகிழ்வை ஊட்டுபவை, உரமளிப்பவை. அவை என்றும் முன்னேறுகின்றன. ஒரு பொழுதும் பின்னடைவதில்லை. அவை என்றும் வளர்பவை, தடைப்படுபவையல்ல. மலர்கள், இனிய பழச்சாறு, பருப்புகள் கொண்டவை. அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் இந்த மனிதனைக் குணப்படுத்துவதற்காக அவற்றை நான் இங்குக் கொணர்கின்றேன். (அதர் 8)

உயிராற்றலின் தலைவ, நீ புனிப் படல விண்ணகங்களுக்குச் சென்று வருபவன். எங்கள் வேண்டுதலையும் கேட்டருள்வாய் . சுற்றிவளைக்கும் திறனுடைய காற்றே. நீ எங்கள் தொழுகைப் பாடல்களைக் கேட்டிடுவாய்.

த.கோ - தி.யூரீ