பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à.

334

வெவ்வேறு உருவங்களில் உலகம் வண்ணக் கோலமிடுகிறது. ஒன்றரை ஆண்டு நிரம்பிய ஞாயிறாகிய தன் கன்றை நக்கிக் கொண்டு அது எழுந்து நிற்கிறது. இதை அறிந்து கொண்ட நான் நிலையான ஒழுங்கில் இருக்கையைத் தேடிச் செல்கிறேன். பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

(இருக் 3)

பகல் இரவு ஆகிய இரண்டும் வியப்பான ஒர் இடத்தில் வாழ்கின்றன. இவற்றில் ஒன்று மறைந்துள்ளது. மற்றது வெளிப்படையாக தெரிவது. நமது நடைவழி இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

(இருக் 3)

- ہم-*

-so تتج_ smammin 云魂 ミ*

S 2

நற்றமிழில் நால் வேதம்